
நாக்பூரைச் சேர்ந்த பிரபல டீ மாஸ்டர் டோளி சாய்வாலா ரூ.1.5 கோடி மதிப்பிலான சொகுசு காரில் வந்திறங்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நாக்பூரைச் சேர்ந்தவர் டோலி. இவர் அங்கு பல ஆண்டுகளாக டீக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவர் ஸ்டைலாக தே நீர் தயாரிக்கும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட அது வைரலானது. இவருக்கு என தனி ரசிகர்கள் உருவாகினர். இவரது ஸ்டைல், இவரது தேனீருடன் அவரும் பிரபலமானார்.
அதாவது, இந்த உலகில் படித்தவர்கள் மட்டும்தான் பிரபலமாக முடியும் என்ற நிலையில் இல்லை. படித்தவர்களும் வாழ்க்கையில் உயர முடியும், படிக்காதவர்களும் வாழ்க்கையில் உயர முடியும் என்பதை இந்த உலகம் நமக்கு தினமும் கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது.
இந்த நிலையில், படித்தவர்கள் வாழ்க்கையில் எந்த வசதியில் இருக்கிறார்களோ அதேபோல் படிக்காதவர்களும் தங்கள் தொழில் மற்றும் கற்றுக் கொள்ளும் திறமையின் மூலம் வாழ்க்கையில் தினமும் தினமும் உயர்ந்து கொண்டே இருக்கிறார்கள். சில நேரங்கள் படிப்பை விட கற்றுக் கொண்ட அனுபவம் நமக்குப் பல வகைகளில் கை கொடுக்கிறது.
அதற்காக படிப்பைவிட வேண்டும் என்று கூறவில்லை. ஆனால் படிக்கவில்லையே என்று ஏங்க வேண்டாம். படிக்கவில்ல என்று ஏங்குவதால் நமக்கு என்ன கிடைக்கப் போகிறது. ஆனால் கையில் ஒரு தொழிலும் திறமையும் இருந்தால் நம்மால் அந்த தாழ்வு மனப்பான்மையில் சிக்கிக் கொண்டிருக்க வேண்யிருக்க தேவையில்லை. இன்று தொலைதூரக் கல்வியில் கூட நம்மால் படிக்க முடியும், நடிகர் முத்துக்காளை 3 டிகிரியை படித்திருக்கிறார். அந்தளவுக்கு சினிமா தொழிலையும், கல்வியையும் அவர் காதலித்து வருகிறார்.
இந்த நிலையில், வாழ்க்கையில் எந்த தொழில் செய்தாலும் அதில் நிறையும், நேர்மையும் இருந்தால் நம்மால் எதிலும் ஜெயிக்க முடியும் என்பதை இவ்வுலகில் பல்வேறு காலக்கட்டங்களில் வாழ்ந்த பலரும் கூறி வருகின்றனர்.
அந்த வகையில், டீ மாஸ்டர் ஒருவர் ரூ.1.5 கோடி மதிப்பிலான காரில் வந்திறங்கி டீ போடுகிறார் என்றால் அதை நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை!!! இது வெளி நாட்டில் எல்லாம் இல்லை. சத்தியமாலும் இந்தியாவில் தான். இவர் உலகளவில் பிரபலமாக உள்ளாவர் அவர்தான் டோளி சாய்வாலா.
இன்று ஒருவர் திறமையாளராக இருந்தால்போதும் அவரது திறமைகளை எந்த வடியில் இருந்தால் எத்துறையில் இருந்தாலும் அதை வெளிப்படுத்த சமூக ஊடகங்கள் உள்ளன. நொடியில் உலகம் முழுவதும் உள்ள மக்களை அது சென்றடையும், அப்படித்தான் ஜஸ்டின் பைபர், உள்ளிட்ட பலரும் உலகப் பிரபலம் அடைந்தனர்.
அந்த வகையில், இன்று உலகம் மக்களின் கண்களில் ஆச்சயர்யம் விரிய வளர்து இருப்பவர் தான் டோளி சாய்வாலா. அவர் ரோட்டோரமாக இருக்கும் கடையில் டீ போடும் பணியைச் செய்து வந்துள்ளார். எல்லோரையும் போலன்றி இவர் தனது ஸ்டைலில் டீ போட்டு மக்களைக் கவர்ந்துள்ளார். இவரது டிரஸ்ஸிங், தனி ஸ்டைல், சுவையான தேனீரால் கவர்ந்திழுக்கப்பட்ட மக்கள், இதை வீடியோவாக எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டனர். அது வைரலானது. இவரது கடையில் கூட்டமும் மொய்க்க ஆரம்பித்தது.

இதையடுத்து டோளி சாய்வாலா பெரிய அளவில் பிரபலமானார். இவரது பிரபலத்தை மையப்படுத்தி பலர் இவருக்கு ஆபர்கள் வழங்கினர். இதைப்பயன்படுத்தி இவர் குறுகிய காலத்தில் பெரிய அளவில் வளர்ந்து சாதனை படைத்துள்ளார்.
அந்த வகையில்,சமீபத்தில் உலகப் பெரும் பணக்காரர்களில் ஒருவரும் மைக்ரோ சாப்ட் இணை நிறுவருமான பில்கேட்ஸ் ரோட்டோரமாக இருக்கும் இவரது டீக் கடைக்கு முன் வந்து இறங்கினார். அதன்பின்னர், டோளி சாய்வாலா டீ போட்டுக் கொடுக்க அதை ரசித்து ருசித்து பில்கேட்ஸ் குடித்தார். இந்த வீடியோவை ஒன் சாய் பிளீஸ் என்று கோர்டு சூட் போட்ட பில்கேட்ஸ் தன் இஸ்ண்டாகிராமில் வெளியிட அந்த வீடியோவை பல லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த வீடியோப்வை லைக் செய்துள்ளனர். மில்லியன் கணக்கில் பார்த்துள்ளனர். இது செம வைரலான நிலையில், டோளி சாய்வாலா மேலும் பிரபலமானார்.
பில்கேட்ஸிடம் இருந்து தனக்கு அழைப்பு வரும் என அவர் கனவிலும் நினைத்திருக்க மாட்டார். ஆனால் அவரது திறமை அவருக்கு அதை நடத்திக் காட்டியுள்ளது.
அதேபோல், துபாயில் பிரபலமான புர்ஜ் கலீஃபாவில் டோளி சாய்வாலா இருப்பது போன்ற வீடியோவை வெளியிடிருந்தார். அதில், உயர்ந்த கட்டிடங்களில் இருந்து துபாவை காண்பதுபோலவும், அங்கே அமர்ந்து அவர் காஃபி குடிப்பது போலவும் அமைந்திருந்த வீடியோ வைரலானது.

இதையடுத்து, டோளி சாய்வாலா ரூ.1.5கோடி மதிப்பிலான கூ பே வடிவிலான காரில் வந்திறங்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒருவருக்கு ஒரு துறையில் ஆர்வமும் முயற்சியும் இருந்தால் அவர் நிச்சயம் உலகில் சாதிக்க முடியும் என்பதைத்தான் இந்த டோளி சாய்வாலாவின் வாழ்க்கையும் வளர்ச்சியும் நமக்கு எடுத்துக் காட்டுகிறது என பலரும் கூறி வருகின்றனர்.
#சினோஜ்கியான்
