Last updated on May 21st, 2024 at 10:25 am

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் பா. ரஞ்சித். இவர் சகோதரர், நிலத்தகராறு விவகாரத்தில், அடியாட்களுடன் சென்று கல்லைக் கொண்டு கேமராவை உடைத்து தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அண்ணா நகரில் வசித்து ரிஷி. இவர் மணலி புது நகரில் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 2019 ஆம் ஆண்டு 20 ஏக்க நிலம் வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.
இப்பகுதியில் வசித்து வருப்வர் ஷகிலா. இவர் அந்த நிலத்தில் 1.5 ஏக்கர் நிலம் தன்னுடயது என்றும், தனது உறவினர்கள் தனக்குத் தெரியாமல் நிலத்தை விற்றதாக உரிமை கோரியுள்ளார். இதுகுறித்த வழக்கு விசாரணையில் உள்ள நிலையில், சினிமா இயக்குனர் பா.ரஞ்சித்தின் அண்ணன் பிரபு அவர்களின் உதவியை நாடிய ஷகிலா இன்று காலை அடிகாட்களுடன் அப்பகுதிக்கு வந்ததாக கூறப்படுகிறது.

இதில் இரு தரப்பினருக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்த நிலையில், வாக்குவாதம் முற்றியுள்ளது.அப்போது பா.ரஞ்சித் சகோதரர் உடன் வந்த நபர்கள் தொழிலதிபர் இடத்தில், இருக்கும் சிசிடிவி கேமராக்களை கற்களைக் கொண்டு அடித்து, உடைத்துள்ளனர்.
இதுகுறித்து, ரிஷி மணலில் புது நகர் காவல் நிலையத்தில் ரஞ்சித்தின் சகோதர் பிரபு அவருடன் சென்ற வழக்கறிஞர்கள் மீது புகார் அளித்துள்ளார்.
அதில், பா.ரஞ்சித்தின் அண்ணன் பிரபு ஆட்களை, ஷகிலா அழைத்துக் கொண்டு வந்து தாக்குதலில் ஈடுபட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சிசிடிவி காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

