
மன வளர்ச்சி குன்றிய மகனுக்கு 11-ம் வகுப்பு சேர பள்ளியின் சீட் கிடைக்காமல் பரிதவிக்கும் தாய்.
கோவை காந்தி பார்க் பகுதி சேர்ந்த வீரலட்சுமி என்ற பெண்ணுக்கு மன வளர்ச்சி குன்றிய மகன் உள்ளார்.அவரது மகன் காந்தி பார்க்கில் உள்ள அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு படித்து பத்தாம் வகுப்பில் 300 மதிப்பெண் எடுத்து பத்தாம் வகுப்பு தேர்வில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளார்.
இந்நிலையில் காந்தி பார்க் பள்ளியில் 11 மற்றும் 12-ம் வகுப்புகள் இல்லாததால் வேற பள்ளியில் சேர்ப்பதற்காக தனது மனம் வளர்ச்சி குன்றிய மகனை அழைத்துச் சென்று ஒவ்வொரு பள்ளியாக 11-ம் வகுப்பு சேர்ப்பதற்காக அலைந்துள்ளார்.
கோவையில் 7 பள்ளிக்களுக்கு மேல் அலைந்தும் தற்போது வரை எந்த பள்ளிகளிலும் மன வளர்ச்சி குன்றிய மகனுக்கு சீட்டு வழங்கவில்லை எனவும் அதற்கு ஆசிரியர்கள் இல்லை என பள்ளி தரப்பில் தெரிவித்ததாக கூறினார்.
மேலும் தனது மகனுக்கு அனைத்து திறமைகளும் இருப்பதாகவும் உடனடியாக பள்ளியில் சீட்டு வழங்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்திருந்தார்.
