Last updated on May 22nd, 2024 at 07:31 am

பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஸ்குமார் தலைமையிலான ஆட்சி நடந்துவருகிறது. இந்த நிலையில், பாட்னாவில் காணாமல் போன 4 வயது சிறுவன் பள்ளியில் சடலாமாக மீட்கப்பட்டதை அடுத்து அங்குள்ள தனியார் பள்ளிக்குமக்கள் தீ வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் பாட்னாவில் ஒரு தனியார் பள்ளியில் 4 வயது சிறுவன் காணாமல் போன நிலையில், இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து
தேடி வந்தனர்.
இந்த நிலையில், பள்ளி வளாகத்தில் சிறுவனின் உடல் உயிரிழந்த நிலையில்கண்டெடுக்கப்பட்டது. அந்த மாணவன் பள்ளிக்குச் சென்றது அங்குள்ள
சிசிடிவியில் பதிவாகி இருப்பதாகவும், அதன் பின்னர் மாணவன் சடலமாக மீட்கப்பட்டதாக போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும், சிறுவன் உடல் பள்ளி வளாகத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்தநிலையில், காணாமல் போன வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை
செய்யப்பட்டு வருவதாகவும். இது தொடர்பாக 3 பேரை கைது செய்துள்ளாதாகவும்
தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே காணாமல் போன மாணவன் பள்ளி வளாகத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட நிலையில், அந்த தனியார் பள்ளிக்கு பொதுமக்கள் தீ வைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

