
புதுச்சேரியில் வயதான அப்பா அம்மாவிற்கு சோறு போடாமல் ஒதுக்கி வைத்த மகன் …சொத்துக்களை அபகரித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே துரத்திய மருமகள் …நியாயம் கேட்டு அலுவலகம் வந்தவர்களை விரட்டி அடித்த துணை மாவட்ட ஆட்சியர் .
அனைவரும் கைவிட்ட நிலையில் தீ வைத்துக் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக வயதான தம்பதிகள் கண்ணீர் மல்க பேட்டி
நீதி கிடைக்குமா வயதான தம்பதிகளுக்கு…..
புதுச்சேரி மதகடிப்பட்டு அருகே உள்ள கலித்தீரத்தாள்குப்பம் கிராமத்தை சனசேர்ந்தவர் 67 வயதான வதிஷ்டா,இவரது கணவர் 77 வயதான நாராயணன் இவர்களுக்கு சொந்தமாக வீடு நிலம் ஆகியவை உள்ளது.
வயதான தாய் தந்தைக்கு சாப்பாடு கூட போடாமல் மகன் ஒதுக்கி வைத்த நிலையில் வீட்டிலிருந்து அவரது மருமகள் மகேஸ்வரி என்பவர் அடித்து வெளியே துரத்திவிட்டார்.
இதனால் மனவேதனைக்கு ஆளான வயதான தம்பதிகள் என்ன செய்வது என்று தெரியாமல் அவர்களுக்கு தெரிந்த வழக்கறிஞர் உதவி உடன் துணை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
ஆனால் மனுவைப் பெற்றுக் கொண்ட துணை மாவட்ட ஆட்சியர் என்ன ஏது என்று கூட விசாரிக்காமல் வயதான தம்பதிகளை அலுவலகத்தில் இருந்து விரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து வயதான தம்பதிகள் கூறும் போது…..
நானும் எனது கணவரும் கஷ்டப்பட்டு சம்பாதித்த சொத்துக்களை பிடுங்கிக் கொண்டு கட்டிய வீட்டிலிருந்து அடித்து துரத்திவிட்டு தனது மருமகள் மட்டும் வாழ்ந்து வருகிறார்.
வீடு என் பெயரில் உள்ளது. ஆனால் நான் இருக்க கூடாது என்று கூறுவதாக குறிப்பிட்டார்.
இது சம்பந்தமாக வில்லியனூர் சப்-கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்ததாகவும் அந்த மனுவை விசாரிக்காமல் சப்-கலெக்டர் என் பெயரில் உள்ள வீடு எங்களுக்கு சொந்தம் இல்லை என கூறி விரட்டியதாக கண்ணீர் மல்க தெரிவித்தார்.
வயதான காலத்தில் இருவரும் களைவெட்டி சாப்பிடுகிறோம். மருமகள் எங்கள் வீட்டை வாடகை விட்டு சாப்பிடுகிறார். நீதி கிடைக்க வேண்டும் என புலம்பினார்.
மேலும் தங்கள் வசிப்பதற்கு ஒரு வீடு வேண்டும் அப்படி இல்லை என்றால் தீ வைத்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வயதான காலத்தில் தாய் தந்தைக்கு சோறு போடாமல் மகன் விரட்டிய நிலையில் சொத்தை பிடுங்கிக் கொண்டு வீட்டை விட்டு மருமகள் துரத்தையே நிலையிலும் நியாயம் கேட்டு சென்ற துணை மாவட்ட ஆட்சியர் விரட்டியதால் மனமுடைந்த தம்பதிகள் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக துணை மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் நின்று கண்ணீர் மல்க கூறியது புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
