
ஹைதராபாத்தில் கையில் பீர் பாட்டில் போதையில் இளம் பெண் ஒருவர் வாக்கிங் செல்பவர்களுடன் வாக்குவாதம் செய்யும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
தெலுங்கானா மா நிலம் ஹைதராபாத்தில் இளம்பெண் ஒருவர் இளைஞர்களுடன் சேர்ந்து சாலையில் கையில் பீர் பாட்டில் வைத்து மது அருந்தியதுடன் அங்கு நின்று கொண்டிருந்த முதியவர் மற்றும் வாக்கிங் சென்றவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
தெலுங்கானாவில் உள்ள ஒரு பகுதியில் இளம்பெண் ஒருவர் தனது ஆண் நண்பர்களுடன் இணைந்து காரில் வந்துள்ளனர். சாலையோரம் காரை நிறுத்திவிட்டு, இருவர் மது அருந்தியுள்ளனர். கையில் பீர் பாட்டிலுடன் அவர்கள் நிற்பதைப் பார்த்த அவ்வழியே வாக்கிங் செல்பவர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர்.
அப்போது போதையில் இருந்த இளம்பெண் ஒரு கையில் பீர் பாட்டில் மற்றும் மற்றொரு கையில் சிகரெட்டுடன் இருந்த நிலையில் கேள்வி எழுப்பியவர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக வாலிபரும் பேசினார்.
இதுகுறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
