
சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை விமான நிலையத்திற்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இரவு மற்றும் அதிகாலை என 2 மெயில்களில் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
மேலும், 5 இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், ஒவ்வொன்றாக அவை வெடிக்கும் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீசார் விசாரணை செய்தபோது, அது போலி மிரட்டல் என்று தெரியவந்ததை அடுத்து, இமெயில் அனுப்பிய நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
