
யூடியூபில் அனுமதியின்றி காதல் தொடர்பான பேட்டியை ஒளிபரப்பியதால் இளம்பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படும் நிலையில், தனியார் யூடியூப் சேனலின் உரிமையாளர் மற்றும் பேட்டி எடுத்த பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
செனை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் 23 வயது பெண். இவர் பட்டதாரி ஆவார். இவருக்கு பெற்றோர் இல்லாத நிலையில், சென்னை அண்ணா நகரில் தங்கி வேலை செய்து வருகிறார்.
இவர் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு, அண்ணா நகரில் உள்ள வணிக வளாகத்திற்குச் சென்றபோது, ’’வீரா டாக் டபுள் டக்ஸ்’’ என்ற யூடியூப் தளத்திற்குப் பேட்டியளித்துள்ளார்.
அதில், காதல் பற்றிய கேள்விகள் கேட்கப்பட்டது. இதற்கு அப்பெண் இரட்டை அர்த்தம் தொனியுள்ள வசனங்களுடன் அப்பேட்டியில் பேசியதாக தெரிகிறது.
இந்த பேட்டி சமூக வலைதளத்தில் வைரலனது. இதற்கு நெட்டிசன்கள் பலரும் கருத்துகள் பதிவிட்டனர். பலரும் கிண்டலாக பதிவிட்டிருந்தனர்.
இதையடுத்து, தன் உறவினர்கள், அண்ணன் இந்த வீடியோவை பார்த்தால் என்னாவது என அப்பெண் பதறிப்போய் மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.
இதில், விரக்தி அடைந்த அப்பெண் எலி மருந்தை வாங்கி சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள், அப்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தற்போது அப்பெண் உயிர் பிழைத்துவிட்ட நிலையில், சிகிச்சை தொடர்ந்து வருகிறது.
இச்சம்பவம் தொடர்பாக, தற்கொலைக்கு முயன்ற அப்பெண்ணிடன் போலீஸார் விசாரணை நடத்தினர்.
அப்போது அப்பெண் போலீஸாரிடம் தெரிவித்ததாவது:
’’அந்த யூடியூப் சேனலுக்கு நான் பேட்டி தர மாட்டேன் என்றேன். அவர்கள் என் அனுமதி இன்றி பேட்டியை வெளியிட மாட்டோம் என்று கூறினர். அதனால்தான் நானும் வெளிப்படையாக கருத்துகள் கூறினேன். ஆனால், என் அனுமதி இன்றி பேட்டியை வெளியிட்டுவிட்டனர். இது எனக்கு அவமானம் ஏற்படுத்தியது.பேட்டி எடுத்த பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், விசாரணை மேற்கொண்டு, யூடியூப் சேனல் நடத்தி வந்த ஏகே ஆர் நகர் 1 வது தெருவைச் சேர்ந்த ராம் (21 வயது), உதவியாளர், யோகராஜ் வயது 21), பேட்டி எடுத்த அண்ணா நகர் விஜயா தெருவைச் சேர்ந்த ஸ்வேதா(வயது 31) ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இவர்கள் மூவரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
SinojKiyan
