Last updated on June 3rd, 2024 at 02:00 pm

ராபா நகர் மீது இஸ்ரேல் நாடு ராணுவம் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஆல் ஐஸ் ஆன் ராபா என்ற வார்த்தை அதிகளவில் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 2. 9 கோடி மக்களால் பகிரப்பட்டுள்ளது. இந்த வார்த்தை ஏன் இந்தளவுக்கு பகிரப்பட்டுள்ளது என்றால் இப்பகுதியின் மீதான தாக்குதலும், அதில்பலர் உயிரிழந்துள்ளதும்தான் காரணம் என கூறப்படுகிறது.
இதுகுறித்த ஒரு விரிவான பார்வையை இப்போது பார்க்கலாம்.
கடந்த அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி இஸ்ரேல் –ஹமாஸ் போர் 7 வது மாதமாக தொடர்ந்து நடந்து வருகிறது.
ஹமாஸ் அமைப்பினருக்கு எதிரான போர் அறிவித்த இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு ஹமாஸ் அமைப்பும் பதிலடி கொடுத்து வருகிறது.
இதுவரை நடந்த போரில் ராபா நகரை தவிர்த்து மற்ற பகுதிகளை இஸ்ரேல் ராணுவம் அழித்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், காசாவில் உள்ள 23 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இஸ்ரேல் போர் நடவடிக்கைகளால் பல்வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.
குறிப்பாக தெற்கு காஸ்வாவில் உள்ள ராபாவில் தஞ்சமடைந்துள்ளனர். கடந்த 7 மாதங்களாகவே ஹமாஸின் மீதான இஸ்ரேல் தாக்குதலின்போது, மக்கள் பலரும், இஸ்ரேல் ராபாவை நோக்கி படையெடுத்தனர்.
இந்த நிலையில் ஹமாஸ் மீதான போர் தொடங்கியதற்காக இலக்கு எட்டப்பட வேண்டும் எனில், ராபாநகர் மீது தாக்குதல் நடத்தப்பட வேண்டும் என இஸ்ரேல் கூறியது.
அதன்படி, ராபா நகர் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தது, ஆனால், இதற்கு உலக நாடுகள் பல எதிர்ப்பு தெரிவித்தன.
ஐ நா நீதிமன்றம் ராபா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தக் கூடாது என உத்தரவிட்டது. இந்த நிலையில், நேற்று முன் தினம் ராபா நகர்மீது இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தியது.
இதில் பாலஸ்தீனியர்கள் 35 பேர் கொல்லப்பட்டனர். இது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இஸ்ரேல் பிரதமர் நேதன்யார்கு, ராபா மீதான தாக்குதல் என்பது துரதிஷ்டவசமானது என்று கூறி இதுகுறித்து விசாரணை நடத்தப்படுகிறது என்று தெரிவித்தார்.
ராபாவின் மீதான தாக்குதலை கைவிட வேண்டும் என்று ஐ நா சபை பொதுச்செயலாளர் அண்டோனியா குட்டரெஸ் கண்டனம் தெரிவித்தார்.
இதுகுறித்து, அவர் சமூக வலைதள பக்கத்தில், ராபாவில் தஞ்சம் அடைந்துள்ள மக்களை கொன்ற இஸ்ரேலின் நடவடிக்கையை கண்டிக்கிறேன் என்றும், காசாவில் பாதுகாப்பான இடமில்லை; உடனே போரை நிறுத்த வேண்டும் என்று பதிவிட்டிருந்தார்.
இதற்கிடையே சமீபத்தில், காஸாவின் ராபா நகரில் உள்ள ஐரோப்பிய மருத்துவமனைக்குச் சென்ற ஐ நா வாகனத்தின் மீது திங்கட்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், இந்தியாவின் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி அனில் காலே மரணம் அடைந்தார்.
இஸ்ரே- ஹமாஸ் நெருக்கெடி தொடங்கியபோது காஸாவில் மரணம் அடைந்த அனைத்துலக இயக்க முதல் பணியாளர் அவர் என கூறப்பட்டது.
இந்த நிலையில், தெற்கு காஸாவின் ராபா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தென்பட்டதாக தகவல் வெளியானது. சமீபத்தில் நிகழ்த்திய பயங்கர தாக்குதலை அடுத்து, இஸ்ரேல் ராணுவம் ராபா நகரின் மையத்தை நோக்கி முன்னேறி செல்வதாகவும் கூறப்பட்டது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று வான்வெளி தாக்குதலில் தல் அல் சுல்தான் நகருக்கு அருகாமை பகுதியில் இஸ்ரேலிய டாங்க்கள் அங்கிருந்ததாகக் கூறப்பட்ட நிலையில், இஸ்ரேல் ராணுவம் இதை உறுதி செய்யவில்லை.
பாலஸ்தீன அமைச்சகம், இத்தாக்குதலில் 45 பேர் கொல்லப்பட்டதாக கூறியது.
இது சர்வதேச அளவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாலஸ்தீன அகதிகளுக்காக ஐ நாவின் சிறப்பு அமைப்பு, போர் தொடங்கியது முதல் ராபாவுக்கு 13 லட்சம் பேர் இடம்பெயர்ந்ததாக அறிவித்தது. மேலும், குண்டு வெடிக்கும் பகுதிகளுக்கு மத்தியில் பாதுகாப்பாக இடம் என எதுவுமில்லை. உணவு குடி நீர் பற்றாக்குறை, குப்பைகள் என மக்கள் அங்கு வசிப்பதற்காக சூழல் இல்லாத நிலை நீடிக்கிறது என சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்தது.
ஏற்கனவே ரஷ்யா-உக்ரைன் போர் 3 வது உலகப் போருக்கு வழிவகுக்கும் என கூறப்பட்ட நிலையில், தற்போது வலுவடைந்துள்ள இஸ்ரேல்- ஹமாஸ் போரும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஸாவிலேயே ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ள நிலையில், இப்பகுதி முழுவதும் உருக்குலைந்துள்ளது. எனவே இப்பகுதியில் இருந்தும்கூட ராபாவுக்கும் அண்டை நாடுகளுக்கும் மக்கள் குடியேறி தஞ்சமடைந்துள்ளனர்.
ராபாவின் மீது இஸ்ரேல் ஏன் தாக்குதல் நடத்தியுள்ளது என்றால், சமீபத்தில், ஹமாஸ் அமைப்பு நீண்ட இடைவேளைக்குப் பிறகு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இந்த ஏவுகணை தாக்குதலில் இஸ்ரேலின் போர்தளவாட பொருட்கள் அழிந்தது என கூறப்படுகிறது.
இது இஸ்ரேலுக்கு பெரிய இழப்பு இல்லை என்றாலும் கூட தங்கள் மீதான தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்க வேண்டும் என முனைப்பில் இஸ்ரேல் ராணுவம் ராபாவின் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது.
அப்பகுதியில் கூடாரம் அமைத்து உயிருக்குப்பாதுகாப்பாக தஞ்சம் அடைந்துள்ள மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதற்கு பலர் நாடுகள் எதிர்ப்பு குரல் கொடுத்து வருகிறது.
ஆனால் இப்போரை தொடங்கியதற்காக இலக்கு நிறைவேற வேண்டுமானால், இப்பகுதியின் மீது தாக்குதல் நடத்தியே ஆக வேண்டும் என இஸ்ரேல் ராணுவம் கங்கனம் கட்டி தாக்குதல் நடத்தி வருவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், இது மேலும் பல உயிர்ச் சேதங்களை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது. எனவே உயிர்ப்பலி நேரக்கூடாது என்ற எண்ணத்தில்தான் உலகின் பல பகுதிகளில் இருந்தும் ஆல் ஐஸ் ஆன் ராபா என்ற ஹேஸ்டேக் மற்றும் புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
SinojKiyan
