Last updated on June 5th, 2024 at 01:53 pm

தமிழ்நாட்டில் நாளை முதல் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ் நாடு, புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் இன்று முதல் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
எனவே கேரளம் மாநிலத்தில் தென்மேற்குப் பருவமழை நேற்று தொடங்கிய நிலையில், இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழைபெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இந்த நிலையில், சேலம், கிருஷ்ணகிரி, நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ் நாட்டில் 11 மாவட்டங்களில் நாளை முதல் மறுநாள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனவும், நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
pavithra

