
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த அரியாகவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பத்மாவதி. இவர் அதே பகுதியில் உள்ள தனியார் கார்மெண்ட்ஸ்சில் வேலை செய்து வருகிறார்.அதே கார்மெண்ட்ஸ்சில் சேட்டு என்பவர் வேலை செய்து வருகிறார்.
பத்மாவதி.சேட்டு இருவரும் ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில் சேட்டு தனக்கு தெரிந்த நபரிடம் 1 கிலோ தங்க நாணயங்கள் உள்ளதாகவும்,அதனை விற்க முடியாததால் தற்போது அதனை பாதி விலைக்கு தருவதாக கூறியுள்ளார். 1 கிலோ தங்கத்தினை 1600 தங்க நாணயங்கள் 40 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்ய உள்ளதாக கூறியுள்ளார்.
அதற்கு பத்மாவதி தம்மிடம் அவ்வளவு பணம் இல்லை என கூறி மறுத்துள்ளார்.தொடர்ந்து சேட்டு பத்மாவதிடம் கூறி வந்த நிலையில் பத்மாவதி தமது உறவினர்களிடம் பேசி 20 லட்ச ரூபாய் பணத்தை தயார் செய்துள்ளார். முதல் தவணையாக 20 லட்சம் ரூபாய் பணத்தை கொடுப்பதாகவும் பின்னர் 20 லட்ச ரூபாய் தருவதாக கூறியுள்ளார்.
அதற்கு சேட்டு தனது நண்பரான முகமது ஜாவித் உடன் சேர்ந்து பெங்களூரை பகுதியை சேர்ந்த ராஜேஷிடம் கூறியுள்ளனர். ராஜேஷ் முதற்கட்டமாக 2 தங்க நாணயங்களிடம் சேட்டுவிடும் வழங்கி நிலையில் அதனை பத்மாவிடம் கொடுத்துள்ளார்.
அவர் கட்டமாக வழங்கப்பட்ட 1 கிராம் மதிப்பிலான 2 தங்க நாணயங்களை நகைக்கடையில் சோதனை செய்தபோது தூய தங்கம் என்பது தெரிய வந்தது .
பின்னர் பத்மாவதி அதற்கு ஒத்துக்கொண்டு தனது உறவினர்களுடன் சேர்ந்து 20 லட்ச ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு பெங்களூருக்கு சென்றுள்ளார். பெங்களூர் பகுதியை சேர்ந்த ராஜேஷுக்கு தொலைபேசி மூலம் அழைத்து நிலையில் ராஜேஷ் காரில் வந்ததாகவும் பத்மாவதி மற்றும் அவரது மருமகன் ஆகிய இருவரையும் அழைத்துக் கொண்டு தோட்டத்திற்கு சென்று 1 கிலோ மதிப்பிலான தங்க நாணயங்களை ராஜேஷ் வழங்கியுள்ளார்.
பத்மாவதி தங்க நகைகளை பெற்றுக் கொண்டு அங்கிருந்து நாமகிரிப்பேட்டை பகுதிக்கு சென்ற நிலையில் அங்கு தங்கநகை பரிசோதித்த போது 1 கிலோ மதிப்பிலான தங்க நாணயங்கள் அனைத்தும் போலி என்பது தெரியவந்ததை அடுத்து பத்மாவதி நாமகிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் முதற்கட்டமாக நாமகிரிப்பேட்டை பகுதியை சேர்ந்த சேட்டு,முகமது ஜாவித் இருவரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் பெங்களூரில் தலைமறைவாக உள்ள ராஜேஷை தனிப்படை அமைத்து தேடி வருவதாக காவல் துறையினர் தெரிவித்தனர். தற்போது தங்கத்தின் விலை அதிகரித்து வரும் நிலையில் பாதி விலைக்கு தங்கம் தருவதாக கூறி 20 லட்சம் பணத்தை இழந்து பத்மாவதி பரிதவித்து வருகிறார்.

