
மதுரையை சேந்த கார்த்திக் ராஜா, ராம்பிரகாஷ், வைஷ்ணவ் ஆகிய மூன்று நபர்கள் கொச்சின் ஏர்போர்ட்டிற்கு வெளிநாடு செல்வதற்காக போடி மெட்டு மலைச்சாலை வழியே காரில் பயணம் செய்துள்ளனர்.
இந்நிலையில் போடிமெட்டின் 17 வது கொண்டை ஊசி வளைவு அருகே திடீரென்று கார் நின்று விடவே காரை ஓட்டி வந்த கார்த்திக் ராஜா வண்டியை ஸ்டாட் செய்ய முயற்சிசெய்துள்ளார்.
ஆனால் எதிர்பாராத விதமாக வண்டியின் எஞ்சினில் திடீரென்று குபுகுபுகுவென்று புகை கிளம்பியதுடன் தீப்பற்றி எரிய தொடங்கியுள்ளது.
அதனைக் கண்ட மூன்று நபர்களும் உடனடியாக காரை விட்டு இறங்கி தங்கள் உடைமைகளை எடுத்துக்கொண்ட நிலையில் காரில் பரவிய தீ கார் முழுவதும் பற்றி கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.
உடனடியாக அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்து நெருப்பை அணைக்க முயற்சி செய்த நிலையில் கார் முற்றிலும் எரிந்து போனது.
இதுகுறித்து குரங்கணி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விருந்து சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

