நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி, 542 தொகுதியில் 240 இடங்களில் வெற்றிபெற்றது. இந்தியா கூட்டணி 232 இடங்களை கைப்பற்றியது.
இந்த நிலையில் பாஜக கூட்டணியில் மஜத., தெலுங்கு தேசம் கட்சிகள் அதிக தொகுதிகளில் அக்கட்சிகள் பாஜகவுக்கு முக்கியத்துறைகள் ஒதுக்க கோரிக்கை வைத்து வருகிறது.
இந்த நிலையில், தில்லியில் இன்று நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மக்கள் உறுப்பினர்கள் கூட்டத்தில் தொடர்ந்து 3 வது முறையாக வது முறையாக மோடி பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவருக்கு பாமக தலைவரும் முன்னாள் எம்பியுமான அன்புமணி ராமதாஸ் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
மேலும், மோடி தலைமையிலான ஆட்சியில் இந்தியா உலகின் 3 வது பெரிய பொருளாதாரமாக உருவெடுப்பது உள்ளிட்ட சாதனைகளை படைக்கும் என்று உறுதிபட நம்புவதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளதாவது:
‘’தில்லியில் இன்று நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் மக்களவை உறுப்பினர்கள் கூட்டத்தில் இந்தியாவின் பிரதமராக தொடர்ந்து மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பெற்ற திரு அவர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்
உங்கள் தலைமையிலான ஆட்சியில் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உறுவெடுப்பது உள்ளிட்ட சாதனைகளை படைக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
