
சமீபத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதில், தேசிய ஜனநாயக கூட்டணி வடமாநிலத்தில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றாலும், தமிழ்நாட்டில் ஒரு தொகுதியில்கூட ஜெயிக்கவில்லை.
தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணியில், பாமக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து போட்டியிட்ட நிலையில் வெற்றி பெறவில்லை. கோவை தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலையு, தோல்வியைத் தழுவினார்.
இந்த நிலையில், கடந்த முறை அதிமுகவுடன் இணைந்து பாஜக கூட்டணி அமைத்தபோது இம்முறையும் கூட்டணி அமையும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், கருத்துவேறுபாட்டால் கூட்டணி அமையவில்லை.
அதேபோல் அதிமுகவும் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை. அதேசமயம் வாக்கு சதவீதமும் குறைந்தது.
இந்த நிலையில், பாஜக பற்றி அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்துக் கூறியுள்ளார்.
அதில், பாஜக ஆர்.சி.பி போல தோற்றுக் கொண்டே இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழ் நாட்டைப் பொறுத்தவரை பாஜக ஆர்சிபி போலத் தோற்றுக் கொண்டே இருக்கும் அதிமுக சிஎஸ்.கே , பல வெற்றிகளை குவித்து இன்னும் பல வெற்றிக்காக காத்திருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
