அழகாக சருமத்தைப் பெறுவதற்காக பெண்கள் நிறைய பணம் செலவழிக்கிறார்கள். அவர்களில் சிலர் ஆரோக்கியமான பொருட்களைக் கொண்டு, சிக்கனமான முறையில் வீட்டிலேயே தங்கள் அழகைப் பராமரிக்கிறார்கள்.
அதன்படி,ல் முகத்தின் அழகு மற்றும் பளபளப்பான தோலுக்கான அழகுக் குறிப்புகளை இப்போது பார்க்கலாம்.
1.ஒரு நல்ல மற்றும் நம்பகமான பிராண்டை தேர்வு செய்து அதன் மூலம் ஃபேஸ்வாஸ் செய்வது. ஒரு நாளைக்கு 2 முறை முகம் கழுவுவது நல்லது.அதிக முறை கழுவினால் தோல் வறட்சி ஏற்படலாம்.
2.முகத்தை கடினமாக துடைக்காமல்,மென்மையான முறையில் துடைக்கலாம்.
3. நீரால் மட்டுமே முகத்தை ஃபேஷ்வாஸ் செய்ய முடியாது. முகத்தை சுத்தம் செய்ய ஆழமான சுத்திகரிப்பு தேவை. எனவே இரவில் தூங்கும் முன்பு கிளென்சரைக் கொண்டு முகத்தை சுத்தம் செய்யலாம்.
இது மேக்கப்பை அகற்றவும், ஆழகாம சரும சுத்தத்திற்கும் உதவும்.
4.சருமத்தை சுத்தமாக வைக்க, டோனர் பயன்படுத்த வேண்டும். கிளென்சர் தவறவிட்ட மேக்கம் மற்றும் தூசுக்களை டோனர் நீக்கும். இது சருமத்தின் பி.எச் அளவை சமப்படுத்தும். இருப்பினும் தோல் மருத்துவரை ஆலோசிப்பது நல்லது.
5.காலநிலை மாற்றத்தால் நம் சருமம் வறண்டு போகலாம். அப்போது சருமத்திற்கு ஈரப்பதம் தேவை. எனவே வெளியில் செல்லும் போது மாய்ஸ்சரைசர்ஸ் பயன்படுத்துங்கள். இயற்கையான மாய்ச்சுரைசர்ஸ் நல்லது.
6.வெளியில் செல்லும்போது தூசி, மாசுகளைத் தவிர்க்க, சன்ஸ்கிரீன் உபயோக்கிக்கலாம். இது, முகச் சுருக்கம், தடிப்புகள், சூரிய ஒளி, பழுப்பு, தோல் சேதத்தை தவிர்க்க உதவும். உங்கள் தோலிற்கு ஏற்ப சன்கிரீன் தேர்வு செய்ய தோல் மருத்துவரை அணுகலாம்.
7. தோல் பராமரிப்புக்கு நைட்கிரீம் நல்லது. இது சருமத்திற்கு ஊட்டமளித்து, ஈரப்பதமாக்கும். மேக்கப்பை நீக்கிவிட்டால் சருமம் வறண்டுபோகும். இதைத்தவிர்க்க நைட்கிரீம் பயன்படுத்தினால் சருமம் மென்மையாகும்.
8. கண்களுக்கு கிரீம் உள்ளது. இது கரும்புள்ளிகள், சுருக்கத்தை போக்கும். இது நாள் முழுவதும் சோர்விரிலுர்ந்து காக்கும்.உறங்கும் முன் கண்களுக்கு கீழேதடவ வேண்டும்.
இதெல்லாம் முக்கியம் என்றாலும் உடலுக்கு போதுமான நீர் அருந்துவது, நமது சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும். உடலின் கழிவுகள் நீக்கி, புத்துணர்ச்சியுடன் இருக்க ஒரு நாளைக்கு 8 கிளாஸ் நீர் அவசியம்.
முக அழகிற்கான குறிப்புகள்!!
Previous Articleவிழுப்புரத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்!
Related Posts
Add A Comment
