ஆந்திராவில் சமீபத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதில், தெலுங்கு தேசம் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.
இந்த நிலையில், விஜயவாடாவில் நடந்த தேசிய ஜன நாயகக் கூட்டணி கட்சிகள் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் ஆந்திரப் பிரதேசத்தின் முதல்வராக சந்திரபாபு நாயுடு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து, ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க இன்று உரிமை கோருகிறார் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு.
பழிவாங்கும் வகையில் அரசியல் இருக்காது என்றும் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவர் என்று தெரிவித்துள்ளார்.
விஜயவாடா சர்வதேச விமான நிலையம் அருகே நாளை காலை பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. இதில், பிரதமர் மோடி, மற்றும் மத்திய அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.
175 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தலில் தெலுங்கு தேசம் 135 இடங்களிலும், 21 ஜனசேனா இடங்களிலும், 8 இடங்களிலும் பாஜகவும் வெற்றி பெற்றுள்ளன.
ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸுக்கு 11 தொகுதிகள் பெற்றது குறிப்பிடத்தக்கது.
