விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது.
காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் பிடாகத்தை அடுத்த அத்தியூர்திருவாதி கிராமத்தைச் சேர்ந்தவர் நா.புகழேந்தி (71). விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏவக இருந்த இவர் கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி காலை திடீரென மாரடைப்பால் காலமானார்.
இதையடுத்து அத்தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதைத் தொடர்ந்து, 6 மாதத்திற்குள் விக்கிரவாண்டிதொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும்.
தேர்தல் ஆணையம் இதற்கான ஏற்பாடுகளைசெய்து வருகிறது. வரும் ஜூலை மாதம் 10 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்பு மனுதாக்கல் தொடங்கியுள்ளது.
