Last updated on June 26th, 2024 at 04:38 pm

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் 100க்கும் மேற்பட்ட உடல் நிலை பாதிக்கப்பட்டவர்கள் கள்ளச்சாராயம் குடித்தவர்களில் பலர் வாந்தி, மயக்கம், தலைவலி மற்றும் வயிறு எரிச்சலால் பாதிக்கப்பட்டு சேலம், விழுப்புரம், மற்றும் புதுச்சேரி ஆகிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து கருணாபுரத்தில் 2வது நாளாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் விஷச் சாராயம் குடித்து 49 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேற்று மாலை, நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அத்துடன் பாதிக்கப்பட்ட உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் மருத்துவர்களிடம் பாதிக்கப்பட்டவர்களின் நிலைகள் பற்றி கேட்டறிந்தார்.
இதுகுறித்த புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
