நடிகர் விஜய் இன்று தனது 50 -வது பிறந்த நாள்
கொண்டாடுகிறார்.இதையொட்டி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை நீலாங்கரை நடைபெற்ற பிறந்த நாள் நிகழ்ச்சியில் சிறுவன் ஒருவன் தன் கையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீப் பற்ற வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை புறநகர் மாவட்ட விஜய் ரசிகர் மன்ற தலைவர் எல்.சி.ஆர் சரவணன் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார். அந்த நிகழ்வியில் சிறுவனை அழைத்து வந்து சாகசம் செய்ய வைப்பதாகக் கூறி, ஓடுகளை தீ எரியும் கையால் உடைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிலையில், சிறுவனின் கையில் மண்ணெண்ணெய் ஊற்றி லைட்டரில் தீப் பற்ற வைத்தபோது அது கையில் தீப்பற்றி எரிந்தது. தீப்பற்றியதால் வலி தாங்க முடியாத சிறுவன் கதறினான். உடனே அருகில் அங்கிருந்தவர்கள் அந்த தீயை அணைக்க முயன்றனர். வலியால் துடித்த சிறுவனை மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றனர்.