கரூர் மாவட்டம் நெரூர் அருகே உள்ள பழமை வாய்ந்த பெருமாள் கோவிலில் பக்தர்கள் யாகம் வளர்த்ததால் புகையின் காரணமாக அருகில் இருந்த தென்னை மரத்தில் தேன் கூடு கட்டி இருந்த நிலையில் சிறப்பு யாகம் செய்ய வந்த கும்பகோணத்தைச் சார்ந்த கணவன் மனைவி 2 பேரும் கரூர் மாவட்டத்தைச் சார்ந்த 4 பேர் என ஆறு நபர்களை தேனீக்கள் சூழ்ந்து கொட்டியதால் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களை பத்திரமாக மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதி வைத்தனர்.
கரூர் மாவட்டம் நெரூர் அருகே உள்ள பழமை வாய்ந்த பெருமாள் கோவிலில் சிறப்பு யாகம் நடத்திவிட்டு தரிசனம் செய்ய வந்த கும்பகோணத்தைச் சார்ந்த சீனிவாசன் வயது 85, அவரது மனைவி கவிதா மற்றும் கரூர் மாவட்டத்தை சார்ந்த ஹரிஷ் வயது 40, ராமகிருஷ்ணன் வயது 62, சுப்பிரமணி வயது 52, செல்மால் வயது 70 நெரூர் பகுதியை சார்ந்த ஆறு பேர் இன்று நெரூர் பகுதியில் உள்ள பழமை வாய்ந்த பெருமாள் கோவிலில் சிறப்பு யாகம் தரிசனம் செய்ய வந்த நிலையில் யாகம் வளர்த்தியதால் புகையின் காரணமாக அருகில் உள்ள தென்னை மரத்தில் கூடு கட்டி இருந்த தேனீக்கள் சூழ்ந்து அவர்களை தேனீக்கள் கொட்டி உள்ளது.
இதன் காரணமாக கரூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் உடனடியாக விரைந்து வந்த கரூர் உதவி மாவட்ட அலுவலர் திருமுருகன் தலைமையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கவச உடை மற்றும் தலைக்கவசம் கொண்டு கோவிலில் உள்ளே இருந்த 6 பக்தர்களை பாதுகாப்பாக மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக அவர்களை சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
யாகம் செய்ய வந்தவர்களை கொட்டிய தேனீ
Related Posts
Add A Comment
