கொடைரோடு அருகே,காமலாபுரத்தில் கார் மோதி சம்பவ இடத்தில் முதியவர் பலி – சிசிடிவி காட்சி வெளியாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…
திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே, காமலாபுரத்தில் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவிற்கு திண்டுக்கல்லை அடுத்த அனுமந்தராயன்கோட்டை அருகே சூசைபட்டியை சேர்ந்த ஆரோக்கியம் (70) என்ற முதியவர் உறவினர் வீட்டிற்கு வந்திருந்தார்.
இந்நிலையில், அவர் திருவிழாவின் போது சாலையை கடக்க முயன்றார். அப்போது, பொள்ளாச்சியில் இருந்து செம்பட்டி, காமலாபுரம் வழியாக வாடிப்பட்டி நோக்கி சென்ற கார், அவர் மீது பயங்கரமாக மோதி விபத்தை ஏற்படுத்தி விட்டு, நிற்காமல் சென்று விட்டது. இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளை வைத்து காரை தேடி வந்தனர். அதன் அடிப்படையில் கார் கண்டுபிடிக்கப்பட்டு, காரை ஓட்டிச் சென்ற கார் டிரைவர் வாடிப்பட்டியைச் சேர்ந்த பாலச்சந்தர் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
