ராசிபுரம் அருகே அரசு பள்ளி மாணவி மயங்கி விழுந்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த புதுப்பட்டி பகுதியை சேர்ந்த சண்முகம் அப்பகுதியில் அழகு நிலையம் நடத்தி வருகிறார்.இவரது மகள் புதுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவி கனிஷ்கா(11) 6ம் வகுப்பு பயின்று வருகிறார்.
இந்த நிலையில் மாணவி வழக்கம் போல் காலையில் பள்ளிக்கு சென்ற நிலையில் இடைவெளிக்குச் சென்ற மாணவி பள்ளியில் மயக்கம் அடைந்து விழுந்ததாக கூறப்படுகிறது.பின்னர் ஆசிரியர்கள் மாணவியை மீட்டு சிகிச்சைக்காக அருகாமையில் உள்ள வடுகம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு மருத்துவர்கள் முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு மாணவி மேல் சிகிச்சைக்காக ராசிபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ராசிபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர்கள் பரிசோதித்த போது மாணவி தனிஷ்கா உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
மாணவி இறந்த துக்கம் தாங்காமல் மருத்துவமனையில் பெற்றோர் உறவினர்கள் கதறி அழுதனர். பின்னர் மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மாணவி தனிஷ்காவிற்கு சிறு வயதில் இருந்தே இதய கோளாறு காரணமாக ஆந்திராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தகாக மாணவியின் பெரியப்பா கூறியது குறிப்பிடத்தக்கது.
ராசிபுரம் அருகே அரசு பள்ளி மாணவி மயங்கி விழுந்து பலி
Previous Articleஜெயம் ரவி- ஆர்த்தி விவாகரத்து??? ரசிகர்கள் அதிர்ச்சி
Next Article எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஜாமீன் மனு தள்ளுபடி
Related Posts
Add A Comment

