டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடந்து வருகிறது.
இந்த நிலையில், லீக் உள்ளிட்ட சுற்றுகள் முடிவடைந்து தற்போது அரையிறுதிப் போட்டிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில், இங்கிலாந்து – இந்தியா இடையிலான அரையிறுதிப் போட்டி கயானாவில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்க உள்ளது.
அரையிறுதியில் வெல்லும் அணி வரும் 29 ஆம் தேதி நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ள உள்ளது

