மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 7 மாத நாய்க்கு ரத்த தானம் செய்யும்படி கோரிக்கை விடுத்து பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.
அதில், நீங்கள் உதவி செய்தீர்களே ஆனால் நான் மனதாரப் பாராட்டுவேன். என்று ஆரம்பிக்கும் அந்த ஸ்டோரியில், 7 மாத வயதே ஆன இந்த நாய் காய்ச்சல் மற்றும் உயிருக்கு ஆபத்தான நிலையில், ரத்த சோகையில் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் உடனடியாக மும்பையில் இருந்து ரத்தக் கொடையாளர் ஒருவர் தேவை…ரத்தம் வழங்கும் நாயானது 25 கிலோ நிரம்பிய 8வயதுடைய நாயாக இருக்க வேண்டும்.
அந்த நாய் அனைத்துவித தடுப்பூசியும் போடப்பட்டு, கடந்த 6 மாதத்தில் எந்த காய்ச்சலாலும் பாதிக்கப்பட்டிருக்க கூடாது என்று தெரிவித்து, அந்த நாயின் புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாவில் அவர் பகிர்ந்துள்ளார்.

