கர்நாடகாவில் 10 ஆண்டுகளாக பெண் தேடியும் கிடைக்கவில்லை சீக்கிரம் பெண்ணை கண்டுபித்து தருமாறு மாவட்ட ஆட்சியரிடம் இளைஞர் ஒருவர் மனு அளித்துள்ளார்.
கர்நாடகம் மாநிலத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இங்குள்ள கொப்பல் மாவட்டத்தில் தனியார் மண்டபத்தில் நடந்த மக்கள் குறைகேட்பு முகாமில், அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் தங்கள் குறையை எழுத்துப் பூர்வமாக பதிவு செய்து மனு அளித்தனர்.
அப்போது, தனகரியை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனக்கு மணப்பெண் தருமாறு மாவட்ட ஆட்சியர் நளீன் அத்தூளிடம் கோரிக்கை விடுத்தார்.
அதாவது, விவசாய குடும்பத்தைச் சேர்ந்த தனக்கு 10 ஆண்டுகளாக பெண் தேடியும் கிடைக்கவில்லை.அதனால் பெண் பார்த்துக் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டார். இதைக்கேட்ட மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் அனைவரும் சிரித்தனர்.
10 ஆம் வகுப்பு படித்துள்ள தங்கப்பா தனியார் கல்லூரி ஒன்றில் உதவி கணக்காளராக வேலை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

