கடந்த ஆண்டு தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு நடிகர் விஜய் சான்றிதழும், பரிசும், ஊக்கத் தொகையும் வழங்கினார்.
அதேபோல் இந்த ஆண்டு பிளஸ் 2 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்த விஜய், விரைவில் மாணவர்களை சந்திக்க இருப்பதாக கூறினார்.
இந்த ஆண்டும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு த.வெ.க தலைவர் சான்றிதழ், ஊக்கத்தொகை வழங்குகிறார்.
அதன்படி, இன்று சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் செண்டரில் விருது வழங்கும் நடைபெற்றுவருகிறது. இதில், த.வெ.க தலைவர் விஜய் பங்கேற்று , மாணவர்களுடன் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டதுடன் விழாவில் பேசி வருகிறார்.
iந்த நிலையில், நாங்கு நேரியில் சாதி ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்ட சிறுவன் சின்னத்துரை அருகில் அமர்ந்து நடிகர் விஜய் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
தமிழக வெற்றிக் கழகம் என்ற அர்டசியல் கட்சியைத் தொடங்கிய பின் நடக்கும் முதல் விழா இது என்பதால் விஜய்யின் பேச்சு மீது எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

