சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மலர் சீரியலில் இருந்து பிரீத்தி சர்மா விலகியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக விஜய் டிவி பிரபலம் ஒருவர் அறிமுகமாகவுள்ளார்.
தமிழ் தொலைக்காட்சிகளில் சீரியல் தொடர்களுக்கு என தனி ரசிகர்கள் உள்ளனர். குடும்பத்தில் பலரும் இந்த சீரியல்களுக்கு ரசிகர்களாக உள்ளதால் எப்படியும் இந்த சீரியலை பார்ப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
ஆனால் ஒரு சீரியல் மக்களிடையே வெற்றி பெற்று அதில் நடித்த நடிகரோ அல்லது நடிகையோ விலகினால் அது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி, டிஆர்பி ரேட்டிங்கையும் குறைத்துவிடும்.
இந்த நிலையில், சன் டிவியில் ஒளிரப்பாகி வரும் ’மலர்’ சீரியல் மக்களிடையே பிரபலம். இந்த தொடரில் ஹீரோவாக நடித்தவர் சில மாதங்களுக்கு முன்பு விலகினார். இதையடுத்து, தற்போது, அந்த சீரியலின் ஹீரோயின் பிரீத்தி சர்மாவும் விலகியுள்ளார்.
இவர் திருமணம் என்ற சீரியலின் மூலமாகத்தான் சின்னத்திரையில் அறிமுகமான நிலையில் அவருக்கு சித்தி 2 சீரியலில் நடிக்கும் வாய்ப்பு வந்தது.
இந்த நிலையில் தற்போது பிரீத்தி சர்மா சன் டிவியில் இருந்து விலகியுள்ள நிலையில் அவருக்குப் பதிலாக விஜய் டிவியில் நடித்து வரும் நடிகை அஸ்வதி நடிக்கவுள்ளார்.
மேலும் நடிகை பிரீத்தி சர்மா சினிமாவில் நடிக்கவுள்ளதால்தான் சின்னத்திரையில் இருந்து விலகியதாகக் கூறப்படுகிறது

