விஷச் சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது என மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா முன்வடிவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார் வீட்டு வசதித்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துச்சாமி.
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்றைய கூட்டத்தொடரின்போது தமிழக அமைச்சர் முத்துச்சாமி இன்று தெரிவித்ததாவது:
விஷச் சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில் அதைத் தயாரித்து, விற்பனை செய்பவர்களுக்கு ஆயுள் வரை கடுங்காவல் தண்டனையோடு, ரூ.10 லட்சம் வரை அபராத தொகையை உயர்த்தி கடுமையான தண்டனைகளையும், விதிப்பதற்கான சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது என்று மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா முன்வடிவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார் வீட்டு வசதித்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துச்சாமி.

