நடிகர் ரஜினிகாந்துடன் தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் சந்தித்தனர்.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது வேட்டையன், கூலி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ள அவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கூலி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சன்பிக்சர்ஸ் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார்.
இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்துடன் தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் சந்தித்தனர். தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் திட்டமிடப்பட்டுள்ள நட்சத்திர கலை விழா குறித்து ஆலோஒசனை மேற்கொண்டதாக தகவல் வெளியாகிறது.

