அரசியலமைப்பு சாசனம் கலங்கரை விளக்கம் போல உதவும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சமீபத்தீல் 18 வது மக்களவைத் தேர்தல் முடிந்த நிலையில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி வெற்றி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. 3வது முறையாக மோடி பிரதமராகப் பதவி ஏற்றார்.
தற்போது நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், இன்று மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேசியதாவது:
நாட்டை தவறாக வழி நடத்த சிலர் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். எந்த அரசாக இருந்தாலும் நமது அரசியலமைப்பு சாசனம் கலங்கரை விளக்கம் போல உதவும். இந்தியாவில் அரசியல் சாசனத்தை எப்போதும் புனித நூலாக கருதுபவன் நான் என்று கூறினார்.
மேலும் எங்களுக்கு கிடைத்த வெற்றி மக்களுக்கான சிறந்த எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்று கூறினார்.

