ஊழியர்களுக்கு ஃபார்ம் 16 சான்றிதழ்களை வழங்குவதில் சிரம் ஏற்பட்டுள்ளது.
வருமான வரி இணையதளத்தில் ஏற்பட்டுள்ள தொழில் நுட்பக் கோளாறுகள் , செயலாக்க தாமதங்கள் காரணமாக சில நிறுவனங்கள் ஊழியர்களுக்கு ஃபார்ம் 16 சான்றிதழ்களை வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
பான் – ஆதார் இணைப்புத் தொடர்பாக புதிய விதிமுறைகளால் இந்த சிக்கல் ஏற்பட்டிருக்கலாம் என நிதி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
ஃபார்ம்16 என்பது, ஊழியர்கள் சம்பள வருவாயில் இருந்து கழிக்கப்பட்ட வரிக்கான சான்றாக நிறுவனங்கள் வழங்கும் சான்றிதழ் ஆகும். சம்பளத்தில் இருந்து கழிக்கப்பட்ட வரி அரசாங்கத்திடம் டெபாசிட் செய்யப்பட்ட்டதற்கான ஆதாரமாகும்.

