செப்டம்பர் முதல் காலி பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகிறது.
திரும்ப பெற்ற பாட்டில்களை விற்பனை செய்ததன் மூலம் அரசுக்கு ரூ.250 கோடி வருவாய் கிடைக்க உள்ளதாக மனுதாரர்கள் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
டாஸ்மாக் மதுபான கடைகளில், காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் செப்டம்பர் மாதம் முதல் தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு எத்தனை மதுபாட்டில்கள் விற்கப்படுகின்றன ? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இதற்கு சராசரியாக ஒரு நாளைக்கு 70 லட்சம் மது பாட்டில்கள் விற்கப்படுவதாக டாஸ்மாக் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கின் விசாரணை வரும் ஆகஸ்ட் 7 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

