பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் பாஜக மாநில செயற்குழு கூட்டம் சென்னை அடுத்த வானகரத்தில் உள்ள தனியார் மண்டப வளாகத்தில் நடைப்பெற்று வருகிறது.
செயற்குழு கூட்டத்தில் மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் பங்கேற்று உரையாற்ற உள்ளார்.
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் நடைபெறும் பாஜக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
இதில் மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் மற்றும் அணிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியடைந்தது.
பாஜகவில் புதிதாக இணைந்தவர்களுக்கு பொறுப்பு வழங்கப்படுவது, பாஜகவின் அடுத்தக்கட்ட செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க உள்ளதாக தகவல் வெளியாகிறது.
இந்த செயற்குழு கூட்டத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்,தமிழக பாஜக பொறுப்பாளர் அரவிந்த் மேனன், பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

