சமீப காலமாக இந்தியாவில் பல பகுதிகளிலும் தெருநாய்கள், வளர்ப்பு நாய்கள் உள்ளிட்டவை சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை பலரையும் கடித்த செய்திகள் மீடியாக்களில் வெளியானது.
இந்த நிலையில், மீண்டும் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது.
சென்னையில் உள்ள தண்டையார்பேட்டையில் வீட்டின் அருகே உள்ள கடைக்குச் சென்ற 8 வயது சிறுவனை தெரு நாய்கள் கடித்தன.
தோள்பட்டையில் காயங்கள் ஏற்பட்ட நிலையில் சிறுவன் அரசு ஸ்டாலின்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், சிறுவனைக் கடித்த வெறிநாய் அப்பகுதியில் மேலும் 3 பேரை தாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. மாநராட்சி நிர்வாகம் இதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

