பாஜக தலைவர் அண்ணாமலை வீட்டின் அருகே காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்.
காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வபெருந்தகையை ரவுடி என அண்ணாமலை கூறியதற்கு காங்கிரஸ் கட்சியின் தென்சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் மாவட்ட தலைவர் துரை தலைமையில் பனையூரில் அண்ணாமலை வீட்டை முற்றுகையிட போவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வீட்டை முற்றுகையிட காவல்துறை அனுமதி மறுத்து விட்டதால் சிறிது நேரம் அண்ணாமலையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு விட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
அதே போல் குரோம்பேட்டையில் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

