ஏழுமலையான் தரிசனத்திற்காக திருப்பதி மலையில் உள்ள காத்திருப்பு மண்டபத்தில் மணி கணக்கில் பொறுமையுடன் காத்திருந்த பக்தர்களிடம் வேடிக்கை செய்து வீடியோ வெளியிட்ட டிடிஎஃப் வாசன் மற்றும் அவருடைய ஒளிப்பதிவாளர் அசீஸ்.
பிரபல youtuber, பைக் ரைடர் டிடிஎஃப் வாசன்,அவருடைய ஒளிப்பதிவாளர் அசீஸ் ஆகியோர் திருப்பதி மலையில் சாமி தரிசனத்திற்காக பக்தர்கள் மணிக்கணக்கில் காத்திருந்து அடைபட்டு கிடந்த இடத்திற்கு சென்று அவர்களை ஏமாற்றும் வகையில் Funny video வேடிக்கை, வினோத வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளனர்.
அந்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டிடிஎஃப் வாசன் வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் சாமி தரிசனத்திற்காக அடைபட்டு கிடக்கும் பக்தர்கள் எப்போது நமக்கு ஏழுமலையான வழிபட வாய்ப்பு கிடைக்கும் என்ற ஏக்கத்துடன் காத்திருக்கும் நிலையில், பக்தர்கள் அடைபட்டு கிடக்கும் அறையின் கதவை திறந்து விடுவதற்காக தேவஸ்தான ஊழியர் போல் அசீஸ் செல்கிறார்.
ஏழுமலையானை வழிபட நமக்கு நேரம் வந்துவிட்டது என்ற ஆனந்த களிப்பில் பக்தர்கள் கோவிந்தா! கோவிந்தா!! என்று கோஷம் எழுப்புகின்றனர்.
அப்போது அவர்களை ஏமாற்றிய அசீஸ் அங்கிருந்து சிரித்துக் கொண்டே ஓடுகிறார். அருகில் இருக்கும் வாசன் வேண்டாம் டா என்கிறார்.

