நீலகிரி மாவட்டத்தில் வாழ்ந்து வரும் படுகர் இன மக்கள் விவசாயத்தை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர் அந்த வகையில் ஆண்டு தோறும் இவர்கள் தெவ்வ ஹப்பா என்னும் அறுவடை திருவிழாவை பல்வேறு பகுதிகளில் கொண்டாடி வருகின்றன
அதன் ஒரு பகுதியாக கேத்தி பகுதியை சுற்றி உள்ள சுமார் 14 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் விரதம் இருந்து கேரடா அருகே உள்ள பணகுடி வன கோவிலில் விரதம் இருந்த ஆண்கள் கலந்துகொண்ட தெவ்வ ஹப்பா என்னும் அறுவடை திருவிழா நடைபெற்றது. அவர்கள் தங்களின் பாரம்பரிய முறைப்படி நடனம் ஆடி சிறப்பு பூஜைகளில் கலந்துகொண்டனர்
