தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் தெருநாய்கள் சிறுவனை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத் புறநகர் பகுதியான காட் கேசர் நகராட்சி ராம்நகரில் வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்த 5 வயது சிறுவனை நாய்கள் திடீரென சுற்று வளைத்து தாக்க முயன்றபோது சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்து வெளிய வந்த தந்தை நாய்களை விரட்டி சிறுவனை காப்பாற்றினார். தெருநாய்கள் நடமாட்டம் குறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

