தமிழ் நாடு அரசின் 10 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட முக்கியத்துறையின் செயலாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, உள்துறைச் செயலராக இருந்த அமுதா ஐ.ஏ.எஸ் வருவாய்த்துறை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
புதிய உள்துறை செயலாளராக தீரஜ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், சென்னை மா நகராட்சி ஆணையராக இருந்த ராதாகிருஷ்ணன் கூட்டுறவு மற்றும் உணவு நுகர்வோர் பாதுகாப்புத்துறைச் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையராக குமரகுருபரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

