நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷின் 50 வது படம் ராயன். இப்படத்தை அவரே இயக்கி நடித்துள்ளார். இப்படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் தனுஷுடன் இணைந்து எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ், காளிதாஸ் ஜெயராம், சுதீப் கிசன், துசாரா விஜயன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இப்படத்தின் போஸ்டர் மற்றும் பாடல்கள் வெளியாகி வைரலான நிலையில், சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்த நிலையில் இன்று மாலை ராயன் பட டிரைலர் வெளியாகும் என படக்குழு நேற்று அறிவித்தது. அதன்படி இன்று ராயன் பட டிரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது.

