தமிழ் நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வரும் நிலையில் இந்தியாவிற்கே வழிகாட்டுகிறது தமிழ் நாடு என்று தமிழ் நாடு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், பள்ளி மாணவர்களுக்கு இருப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் என மக்கள் கோரிக்கையை ஏற்று 2.75 கோடி சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.
முதியோர் உதவித் தொகை ரூ.1000 என்பது ரூ.1200 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி உதவித் தொகை ரூ.1000 ல் இருந்து ரூ.1500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. முதியோர் உதவித் தொகை திட்டத்திற்கு ரூ.5337 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மிக்ஜாம் தூத்துக்குடி புயல் நிவாரணத்திற்கு ரூ.2476.89 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஏழை, எளியோருக்கு 6,52,559 இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன என்று தமிழ் நாடு அரசு தெரிவித்துள்ளது.

