தங்கலான் படத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. இவர், ரூ.10 கோடி கடனை செலுத்தாத விவகாரத்தில் இவர் தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள தங்கலான் படம் வெளியாகும் முன் ரூ.1 கோடி பணத்தை டெபாசிட் செய்ய வேண்டும் என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
உத்தரவின் பேரில் ரூ.1 கோடி பணத்தை சொத்தாட்சியர் கணக்கில் செலுத்தியதாக ஸ்டுடியோ கிரீன் தரப்பில், தெரிவித்ததை அடுத்து, தங்கலான் படத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இவ்வழக்கு வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதனால் விக்ரம் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

