Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
கோவையில் 7மாத குழந்தையை காப்பாற்ற பெற்றோர் துடித்த துடிப்பு… Child Heart Operation | Media Mines
ஏழு மாத குழந்தைக்கு அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டங்கள் எதுவும் இல்லையா புலம்பும் பெற்றோர்கள்… கோவையைச் சேர்ந்த தம்பதிகளின் 7 மாத குழந்தை இருதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தபோது உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் இந்த அறுவை சிகிச்சைக்கு 4 லட்சம் ரூபாய் செலவாகும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். 300 வரை வருமானம் ஈட்டக்கூடிய மரம் வெட்டும் கூலித் தொழிலாளியான தந்தை அருமை தனது குழந்தையின் அறுவை சிகிச்சைக்கான பணத்தை சேர்க்க முடியாமல் மன உளைச்சல் ஆகி தவித்து வந்தார். மேலும் அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலமாக தனது குழந்தையின் உயிரை காப்பாற்றி விடலாம் என்று அது சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நாடும் பொழுது ஒரு வயது ஆனால் மட்டுமே மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் குழந்தையின் அறுவை சிகிச்சை செய்ய முடியும் என்று தெரிவிக்க மன உளைச்சல் அடைந்த குழந்தையின் தந்தை ஒரு வயதிற்கு கீழ் இருக்கக்கூடிய குழந்தைகளுக்கு தான் பிறந்த உடனே ஏற்படும் பிரச்சனைகளை கண்டறிந்து அதற்கான அறுவை சிகிச்சையோ உரிய மருத்துவமோ செய்ய பணம் தேவைப்படுகிறது இப்படி நீங்கள் சொன்னால் ஒரு வயதுக்கு கீழ் இருக்கும் குழந்தைகள் ஏதேனும் பிரச்சினையுடன் பிறக்கும் பொழுது அவர்களின் உயிருக்கு அரசு பொறுப்பு இருக்காதா அப்போ இந்த ஒரு வயதிற்கு மேல் வந்தால் மட்டுமே அதை உயிர் என்று இந்த அரசு கருதுகிறதா இன்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் ஒருபுறம் தந்தை தவிக்க மறுபுறம் தாய் நாங்கள் எங்கு சென்றாலும் இங்கே இது சாத்தியமில்லை நீங்கள் மற்ற மருத்துவமனை செல்ல வேண்டும் சென்னை சென்று மருத்துவம் பாருங்கள் என்றெல்லாம் எங்களை அலைக்கழிப்பு செய்தார்கள் அந்த சூழ்நிலையில் சென்னை செல்லவும் எங்களிடம் பணம் இல்லை ஒருவேளை சென்னை சென்று அங்கு என் குழந்தைக்கு ஏதேனும் ஒன்று ஆகிவிட்டால் எங்கள் குழந்தையை திரும்ப எங்களுக்கு ஊருக்கு எடுத்துட்டு வரக்கூட பணம் இல்லை இதனாலயே நாங்கள் சென்னை செல்வதை தவிர்த்தோம் இதை அந்த தாய் பேசிக்கொண்டிருக்கும் பொழுது சுற்றி இருந்தவர்களின் இதயம் சற்றே கனத்தது... மேலும் சமூக வலைதளங்களில் தனது குழந்தையின் அறுவை சிகிச்சைக்காக உதவுங்கள் என்றும் பதிவிட்டு இருந்தார் இதை கண்ட கரூரை சேர்ந்த தனி ஒருவன் அறக்கட்டளையின் நிறுவனர் பாபு சம்பந்தப்பட்ட குழந்தையின் பெற்றோர்களை சந்தித்து அவர்களுக்கான உரிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தினை உடனிருந்து செயல்படுத்தி குழந்தையின் உயிரை காப்பாற்றினர்.
angiogram cost in coimbatore best pediatric heart surgeon in coimbatore child heart surgery child open heart surgery coimbatore congenital heart defect heart heart attack heart defect heart health heart operation heart operation for child at free of cost. heart surgery open heart operation open heart surgery open heart surgery for children operation theatre vlogs pediatric heart surgery pediatric heart surgery in coimbatore
Related Posts
Add A Comment