
ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன்லால் சர்மா தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.
இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் சமீபத்தில் குழந்தை நடைபெற்றுள்ளது. இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நாட்டில் குழந்தை திருமணம் நடைபெறுவதாக தகவல் வெளியாகும் நிலையில், வட மாநிலங்கள் இது அதிகளவில் நடப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் சமீபத்தில் குழந்தை நடைபெற்றுள்ளது. இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Hello @PoliceRajasthan, child marriage is still occurring openly in Rajasthan. What actions are being taken to address this issue?
— Divya Gandotra Tandon (@divya_gandotra) May 9, 2024
pic.twitter.com/fpWGFi9K74
இந்த நிலையில் குழந்தை திருமணங்களை தடுக்க நீதிமன்றத்தின் தலையீடு கோரிய பொது நல மனுவை ராஜஸ்தான் உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது. குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் 2006 அமலுக்கு வந்தாலும், மாநிலத்தில் குழந்தைத் திருமணங்கள் இன்னும் தொடர்ந்து வருவதாக நீதிமன்றம் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் புதன் கிழமை அன்று மே 1 ஆம் தேதி குழந்தை திருமணங்கள் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்யும்படி மாநில அரசுக்கு உத்தரவிட்டது.
குழந்தை திருமணங்கள் நடத்தப்பட்டால் அதற்கு கிராமத் தலைவர்கள், பஞ்சாயத்து உறுப்பினர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த ஆண்டு அக்ஷய திருதி பண்டிகையை முன்னிட்டு உயர் நீதிமன்றம் இந்த உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், இந்தியாவில் குழந்தை திருமணங்கள் பற்றி யுனிசெஃப் அறிக்கை, குழந்தை திருமணங்கள் ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் குறைந்து வருகிறது. இந்தியாவில் 20 முதல் 24 வயதுடைய பெண்களில் 23 சதவீதம் பேர் முதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர். மேலும், குழந்தைத் திருமணங்கள் குறைப்பு சராசரி ஆண்டு விகிதம் 4.9 சதவீதம் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
