தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் வெற்றிமாறன். இவர் தற்போது விடுதலை-2 படத்தை இயக்கிவருகிறார். இந்த நிலையில், சத்தமில்லாமல் அவர் அடுத்த படத்தை இயக்கி வருவதாக தகவல் வெளியாகிறது.
அதாவது, வெற்றிமாறன் வடசென்னை ராஜன் கதாப்பாத்திரத்தை மையப்படுத்டி, ஒரு கதையை ரெடி செய்துள்ளாராம். இப்பட ஷூட்டிங் 75% சதவீதம் முடிந்துள்ள நிலையில், இதில், அசுரன் படத்தில் தனுஷ் மகனாக நடித்த கென் கருணாஸ் நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது.
விடுதலை 2 பட வேலைகள் முடிந்த பின், இப்படத்தின் வேலைகளை வெற்றிமாறன் தொடங்கவுள்ளார்.
இப்படத்திற்கு ராஜன் வகையறா என பெயர் வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இப்படம் வட சென்னையைவிட சூப்பராக உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகிறது. இதனால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.
