சவுக்கு சங்கருக்கு எதிரான 16 வழக்குகளின் விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ரூ.1 கோடி பணத்தை சொத்தாட்சியர் கணக்கில் செலுத்தியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் ஞானவேல் ராஜா, இவர் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் தங்கலான். இப்படத்தில் விக்ரம் நடிக்க, பா.ரஞ்சித் இயக்கியுள்ளர்.
இந்த நிலையில், அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் என்பவரிடம் பெற்ற கடனை செலுத்தாததால் ஞானவேல் ராஜாவை திவாலானர் என அறிவிக்கக் கோரி உயர் நீதிமன்ற சொத்தாட்சியர் வழக்குத் தொடர்ந்தார்.
இவ்வழக்கு கடந்த சில நாட்களுக்கு முன் விசாரணைக்கு வந்தபோது, தங்கலான் மற்றும் கங்குவா ஆகிய படங்களை வெளியிடும் முன் ஒரு தலா கோடி ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும் என்று தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பணம் டெபாசிட் செய்தது குறித்து,உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்து ஒப்புதல் பெற வேண்டும் என்று நீதிமன்றம் உத்தவிட்டிருந்தது.
அதன்படி, ஞானவேல் ராஜா அப்பணத்தைச் செலுத்தியுள்ளார்.
ரூ.1 கோடி பணத்தைச் செலுத்திய ஞானவேல்ராஜா
Next Article தமிழ்நாட்டில் விமான கட்டணங்கள் உயர்வு
Related Posts
Add A Comment

