தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் ஹலிதா. இவர் பீப்பி, சில்லுக்கருப்பட்டி,ஏலே ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு அவர் இயக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட் படம் மின்மினி. இப்படத்தில் இரண்டு கட்டங்களாக நடக்கும் கதையில் குழந்தைகளாகவும், அவர்கள் வளர்ந்த பின் நடக்கும் கதைபோல அமைக்கப்பட்டது.
இப்படத்தில் நடித்த குழந்தைகள் வளர்வதற்கு 7 ஆண்டுகள் காத்திருந்தனர்.
அவர்கள் வளர்ந்த நிலையில்,மீண்டும் இப்படத்தின் காட்சிகள் கடந்த ஆண்டு ஷூட்டிங் நடத்தப்பட்டது. இப்படம் சமீபத்தில் வெளியானது.
இந்த நிலையில், இப்படத்தின் பெயரில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஒருபடம் சென்சார் செய்யப்பட்ட நிலையில், அதேபெயரில் படம் ரிலீசானதால் தனக்கு ரூ.10 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக வழக்கு தொடர்ந்ததாக தகவல் வெளியாகிறது.

