நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகளான பிரியா, கடந்த 2022 ஆம் ஆண்டு தொலைக்காட்சி நடிகர் முனீஸ் ராஜாவை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களின் திருமணத்திற்கு நடிகர் ராஜ்கிரண் எதிர்ப்பு கூறியிருந்தார் இவரின் எதிர்ப்பை மீறி முனீஸ் ராஜாவை பிரியா திருமணம் செய்து கொண்ட நிலையில், இரண்டு ஆண்டுகளில் இருவரும் பிரிந்தனர்.
கடந்த பிப்ரவரி மாதம் வீடியோ பிரியா கண்ணீருடன் பேசும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், எங்கள் திருமணத்தை சட்டப்படி பதிவு செய்யவில்லை. இதுகுறித்து முனீஸ்காந்திடம் கேட்டபோது, அவர் ஏற்கனவே திருமணம் ஆனது தெரிய வந்தது.
என் அப்பாவிடம் பணம் வாங்கி வரச்சொல்லி, என்னை தினமும் அடித்துத் துன்புறுத்தினார். இனிமேல் அவருடன் சேர்ந்து வாழா முடியாத என்ற நிலையில் அவரைவிட்டு பிரிந்தேன். என் அப்பாவின் காலி விழுந்தேன் என்று தெரிவித்துள்ளார்.

