ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே 4 வயது சிறுவனை வெறிநாய் கடித்ததில் ரேபிஸ் நோய் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே கடந்த ஜூன் 27 ஆம் தேதி, நிர்மல்(4 வயது) என்ற சிறுவன் தன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது, வெறிநாய் ஒன்று அவரைக் கடித்தது. இதையடுத்து, சிறுவனை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
சிறுவனுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், ரேபிஸ் நோயின் தாக்கம் தீவிரமடைந்து சிறுவன் நிர்மல் இன்று உயிரிழந்தார்.
