
எண்ணம் போல் வாழ்க்கை அமைய சில முக்கியமானவற்றை தெரிந்துகொள்வோம்.
ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கையை தம் எண்ணம் போலவே வாழ வேண்டும் என்று நினைப்பார்கள்.
ஆனால் அவர்களின் வாழ்கையில் இன்பம், துன்பம், பிரச்சனைகள், முயற்சி, நம்பிக்கை இவை அனைத்தும் இருக்கும்.
வாழ்க்கையில் சந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் தம்முடைய
சந்தோஷங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைத்து கொண்டிருப்போம்.
உன் வாழ்க்கையில் என்ன ஆகுவேன் என்று நினைக்கிறாயோ அதே எண்ணங்களை முயற்சி எடுத்துக் கொண்ட இருக்க வேண்டும்.

சில மனிதர்கள் தனக்கு மட்டும்தான் வாழ்கையில் பிரச்சனைகள் வந்து கொண்ட இருக்கிறது என்று கூறுவார்கள். ஆனால் தம் வாழ்வில் நடக்க கூடிய சாதாரண பிரச்சனைகளுக்குக் கூட புலம்பிக்கொண்டே இருப்பார்கள்.
இந்நிலையில் பிரச்சனைகள் இருப்பவர்கள் வாழ்க்கையில் எப்போதும் நிம்மதியாக இருக்க முடியாது.
மனிதர்களின் எண்ணங்கள் தவறாக இருந்தால் அவர்களுக்கு நடப்பவை அனைத்தையும் தவறாகத்தான் இருக்கும்.
மனதில் நல்ல எண்ணங்கள் மட்டும் இருந்தால் போதும்! வாழ்க்கையில் நிம்மதியும், சந்தோசங்களும் இருந்து கொண்டே இருக்கும்.

நல்ல எண்ணங்கள் இருந்தால் வாழ்க்கையில் வெற்றிகள் மட்டும் இருக்கும். வாழ்க்கையில் நம்பிக்கையை மட்டும் விட்டு விடாதீர்கள்.
எனவே நம்மனதில் சரியான முயற்சியை எடுத்து கொண்டே இருக்க வேண்டும்.அப்போதுதான் வாழ்க்கையில் நாம் நினைத்ததை அடைய முடியும், இலக்குகளையும் அடைந்து வாழ்க்கையில் வெற்றிச் சிகரத்தில் ஏறி அமர முடியும்.
எண்ணம்போல் வாழ்க்கையை அமைய நாம் அனைவரும் மேற்கூறியவற்றைக் கடைப்பிடித்தாலே எல்லோரும் தோல்விப் படிகளைத் தாண்டி வெற்றி கோட்டைக்குள் நுழைய முடியும்.
Pavithra

1 Comment
Super Pavithra.. very nice..